வாழ்வில் சுவை வருமே

வாழ்க்கைப் பயணத்தில் மேடு பள்ளங்கள் பார்த்து பயம் வருமே
நேர்மை வழியினில் நாமும் நடந்திட வாழ்வில் சுவை வருமே
முன்னே நீ செல்ல.. பின்னே நான் செல்ல‌..
நம்வாழ்வு நலமாக நடைபயிலும்..

(வாழ்க்கை)

துன்பம் வரும் நேரங்கள்.. தைரியம் உடுத்து..
கஷ்டங்களும்.. நம்மை விட்டோடும்..
தோல்வி தரும் தருணங்கள்.. நம்பிக்கை எடுத்து..
அணிந்து கொள்ள.. வெற்றியும் நட்பாகும்..
வாழும் வரை போராட்டம்.. எதிர்த்து நிற்க தேரோட்டம்..
நன்மைகள் தேடியே நமை அடையும்
அனு தினம் வாழ்வினில் மகிழ்ச்சியும் நமக்காகும்..

(வாழ்க்கை)

வாழ வந்த வாழ்வினில்.. வலி உண்டு எப்போதும்..
முயற்சி செய்ய.. வழிகளும் கிடைக்கும்..
கைகளிங்கு சேர்ந்தேதான்.. ஓசைதனை எழுப்ப..
அகங்கார நீர்க்குமிழி.. அத்தனையும் உடைக்கும்..
பிரச்சனைகள் ஓடி விடும்.. நலம் அனைத்தும் கோடி தரும்..
நாளைய பொழுதுகள் நன்கு விடிய‌
வேலைகள் அனைத்தும் சாதகம் ஆகும் நமக்கு!

(வாழ்க்கை)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (24-Mar-18, 11:18 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 83

மேலே