நானும் கடவுளும் - 4

அதென்ன இந்துக் கடவுளர்கள் இந்துகளுக்கு மட்டுமே நன்மை செய்வாரென்பதும்,
இஸ்லாமியக் கடவுள் முஸ்லீம்களுக்கு மட்டுமே அருள் செய்வார் என்பதும்,
கிறிஸ்துவக் கடவுள் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே நன்மை செய்வார் என்பதும்,
புத்தக் கடவுள் பௌத்தர்களுக்கு மட்டுமே நன்மை செய்வார் என்பதும்,
ஆலயங்களில் கடவுளை கற்சிலைகளில் சிறை வைப்பதும்,
நாட்டுடைமை உரிமை கொண்டாடுவதும் முட்டாள் மனிதர்கள் பொழுதுபோக்கு.
அதுவே அவர்கள் வாழ்க்கையாயிற்று.

எடுத்துச் சொன்னால் சிந்தித்துப் பார்க்கும் காலமெல்லாம் போய் குருட்டு பூனைகள் மதில்களுக்குத் தாவுவதாய் நீரற்ற கிணற்றில் விழுந்து துடிக்கின்றன.

அன்பென்ற கடவுள் அனைவருக்கும் பெற்றோர்.
மற்றவரெல்லாம் அன்பை விற்றோர்.

அன்பால் கொடுப்பதை தடுக்க முடியாது.
அன்பில்லா இடத்தில் எதையும் பெற முடியாது.

ஞானம் பெற அன்பை உணர்ந்து அன்பின் வழி வாழப் பழகு.
பொய்யும், புரட்டையும், திருட்டையும் இன்றோடு விட்டுவிடு.

ஆழ்ந்த பசியில் அடிவயிற்றில் எரியும் அக்னியின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன்.
பகுத்தறிவு என்பது எதிர்ப்பதோ, மறுப்பதோ அல்ல.
அன்பின் வழி தன் வாழ்வை உத்தமமாக வாழ்ந்து காட்டுதலில் உள்ளது பகுத்தறிவு...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Mar-18, 11:17 am)
பார்வை : 800

மேலே