தூரத்து வெளிச்சம்

கருமையாகிக் கிடக்கிறது மனசு..
முற்களால் ரணப்பட்டு நாட்கள்..
ஒளி தேடிப் போகும் போதெல்லாம்
மின்சாரத்தை மரிக்கச் செய்கிறது காலம்..
வெற்றிச் சிகரத்தின் வழிகளிலெல்லாம்
மயக்கும் காரணிகளின் ஊர்கோலம்..
வெயில் காய நினைத்தவுடனேயே
ஆரம்பம் ஆகிறது கார்காலம்..
கோலம் போடும் ஆர்வமெடுக்க
கொட்டித் தீர்க்கிறது மழைமேகம்..
ஓவியம் வரைய தூரிகையெடுக்க
குளிரில் நடுங்கியே இத்தேகம்..
எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களுமே
எங்கெங்கும் பரவிருந்தாலும்
எப்போதாவெனும் கிடைக்கும்
சிறுவெற்றியும் உந்துதலே!
எட்டுக்களை எண்ணி எண்ணி வைத்திட
ஏகாந்தம் இருந்தபோதிலும்..
அதோ தூரத்தில் தெரிகிறதே வெளிச்சமெனும்
சிறுநம்பிக்கை அதுபோதும் வாழ்வதற்கு..

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (24-Mar-18, 10:29 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 81

மேலே