மனம்

எத்தனை மனம் உண்டு
சொல்லத்தெரிந்த மனம்
சொல்லத்தெரியாத மனம்
வாடிவதங்கும் மனம்
அச்சம் கொள்ளும் மனம்
அஞ்சாமல் துணியும் மனம்
ஆசை கொள்ளும் மனம்
எளிமை நாடும் மனம்
ஆடம்பரம் விரும்பும் மனம்
ஏக்கம் கொள்ளும் மனம்
இனியன என்னும் மனம்
தீயதை நாடும் மனம்
உறவுகளுக்கு தவிக்கும் மனம்
உறவே வேண்டாமென்று
தனிமையை விரும்பும் மனம்
புதுமை நாடும் ஓர் மனம்
பழைமையை எண்ணும் ஓர் மனம்
குரங்காய் தாவும் ஓர் மனம்
அமைதியின் நிலைக்கு போகும் இன்னொரு மனம்
எத்தனை விதம் மனதினிலே
மனமே இத்தனை விதம் கொண்டாய்
இன்னும் அறியத்தான் முடியவில்லை உன்னை

எழுதியவர் : பிரகதி (25-Mar-18, 2:58 pm)
சேர்த்தது : பிரகதி சி
Tanglish : manam
பார்வை : 589

மேலே