நீ அழுக்காவா இருக்கற

ஏன்டி செவத்த பொண்ணு, ஒதட்டுக்கு மேல மருவு. அழகான பொட்டு, தலை முடிய விரிச்சுப் போட்டுட்டு வர்றயே நீ யாருக்கு ஒறவுக்கார பொண்ணு?
😊😊😊😊😊😊
பாட்டிம்மா, நான் நடுவளவு நாச்சிமுத்து அய்யாவோட மகளோட தோழி.
😊😊😊😊😊
ஓ... நீ சென்னையில இருந்து வந்திருக்கறயா? உம் பேரு என்ன?
😊😊😊😊😊
எம் பேரு அல்கா( Alka).
😊😊😊😊😊
ஏன்டி நீ அழுக்குப் பிடிச்சா கெடக்கற? நல்ல நெறம். லட்சணமா இருக்கற. தலை முடிய விரிச்சுப் போட்டு இருக்கறதுதான் நல்லா இல்ல. உங்கப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பெத்த மகளுக்கு நல்ல பேரா வைக்கத் தெரியாதா? அழுக்காவாம், அழுக்கா! ஒரு நல்ல தமிழ்ப் பேருகூட அவுங்களுக்குத் தெரியாதா? உம் பேரு இந்திப் பேரு மாதிரி இருக்குதே!
😊😊😊😊😊
எம் பேரு இந்திப் பேருதாங்க பாட்டிம்மா. நாங்க குஜராத்காரங்க. நான் பொறந்து வளர்ந்ததே சென்னையில தான்.
😊😊😊😊😊
ஓ...நீ குசராத்துக்காரியா? சரி உனக்கு ஏன் 'அழுக்கா'ன்னு பேரு வச்சாங்க?
😊😊😊😊😊
என்னோட அம்மா, அப்பாவுக்குப் பிடிச்ச பேரு. நீஙக தமிழர்கள்ல 95% க்கு மேல கொழந்தைங்களுக்கு இந்திப் பேரத்தானே வைக்கிறீங்க. நாங்கெல்லாம் தமிழர்கள் மாதிரி இல்லை. தாய்மொழிப் பற்று உடையவங்க.
😊😊😊😊😊😊
நீ சொல்லறதும் நாயந்தான்டி. எங்க சனங்கதான் திரைப் படங்களைப் பாத்து வீணாப் போனவங்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Alka = beauty; girl with lovely hair.