இது கவிதை இல்லை என் தோழிக்கு சில வரிகள் சில சகோதரிகளுக்கும்
இது கவிதை இல்லை என் தோழிக்கு சில வரிகள் (சில சகோதரிகளுக்கும் ) : மன்னையில் பிறந்த பூந்தென்றலே நீ நலமா...? கவலை கொள்ளாதே நீ என்றாவது ஒரு நாள் உனக்காகவும் வசந்த காலம் பிறக்கும் ... உன் தந்தையின் பேச்சில் கோபங்கள் தெரியலாம் ஆனால் அன்னையின் பேச்சில் பாசங்களை அறிவாய்...மற்றவர்களுக்கு என்ன தெரியும் உன் குடும்பத்தையும் உன் குணத்தையும் ... யாரு என்ன சொன்னால் என்ன கவலை வேண்டாம் உன் அன்பான குடும்பத்திற்க்கு... மனதில் உள்ள காயங்களை மறந்து நீ மகிழ்ச்சியாய் இரு... சிலரின் வார்த்தையினால் உன் தந்தையின் மனதில் உள்ள கோபத்தை உன்னிடம் காட்டுகிறார் என்று கலங்காதே... உன் மனதில் உள்ள தப்பான எண்ணங்களை விட்டு விடு... துயரமும் ஒருநாள் விலகும் மகிழ்ச்சியும் மறுநாள் பிறக்கும் ... நீ வாடிய பூவாய் இருக்கிறாய் மீண்டும் உன் தோட்டத்தின் பூஞ்சோலை என்னும் பூக்கள் பூக்கும்... மனம் விட்டு பேசு மனசுமை குறையும்...உன் தந்தைக்கும் உன் மேல் பாசம் உண்டு .. சிலரின் மீது உள்ள கோபத்தை உன் தந்தை உன்னிடமும்,உன் தாயிடமும் தான் காட்டுகிறார் அதனை நீ கோபமாக என்னாதே? நிதானமாக எடுத்துக்கொள் ... உன் மீது அவர்க்கும் பாசம் உண்டு என்பதை மறந்து விடாதே... உன் பாசத்தை வெளியில் காட்டாமல் இருக்காலாம் என்றாவது ஒரு நாள் நீ அறிவாய்... சகியே மனதில் எதையும் நினைக்காதே..! தனிமையில் இருக்காதே.. ! பலவற்றை நினைத்தால் மனதில் தப்பான எண்ணங்கள் தான் தோற்றும் ... உன் மனதில் உள்ள பிரச்சனைகளை நினைக்காதே அதில் உள்ள பிரச்சனை ஒரு நாள் தீர்வு காணலாம் ... கண் கலங்கும் போது பல நினைவுகள் வரலாம் உன்னை நீ சமாதனம் படுத்திக்கொள்... என்றும் உனக்கு ஒரு வழி பிறக்கும் அப்போது புரிந்துக்கொள்வார்கள் அதுவரை காத்தியிரு ...நானும் என் தவறுகளை அறிந்து உன்னிடம் இப்போது விலகியே நிற்கிறேன்... என்னையும் மன்னித்து விடு என்னையும் மனிதனாக்கி உன் அன்புக்கு நன்றி....