வாழ்வின் ரகசியம்
வாழ்வின் ரகசியம்
இந்த நிமிட வாழ்வுதனை
இதமாய் நீயும் அனுபவித்து விடு
அடுத்த நொடி எப்படியிருக்கும்
நம் யாருக்குமே அது தெரியாது
கவலை நம்மைக் கட்டிப்போடும்
துன்பம் விடாது துரத்தி அடிக்கும்
எல்லையில்லா பிரச்சனைகள்
புதிதாய் புதிதாய் முளைத்து வரும்
நேற்றைய கணக்கு விடை கேட்கும்
நாளைய பாடு நமைப் பார்க்கும்
இவை அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு
நிர்மலமான மனம் கொண்டு
நடப்பது நடக்கட்டும் என நினைத்து
அந்ந நொடியை அனுபவித்து
அடிமனது வரை அதை எடுத்துச் சென்றால்
அற்புதங்கள் பல நிகழ
நூறு சதவிகிதம் வாயப்புண்டு
ஆனந்தம் உடம்பில் பரவி விட்டால்
அனைத்து அவயங்களும் அதிலே மயங்கிவிடும்
பின்,
கவலை, துன்பம், பிரசரசனைகள்,
இவை யாவையும் தன் பலம் இழக்கும்
வந்த சுவடு தெரியாமல்
தத்தம் இருப்பிடம் அவை சென்றுவிடும்
இதை தவறவிடாமல் நாம் கடைபிடித்தால்
இனிய நாளாய் அது அமையும்
இனிய நாளாய் அது அமைந்தால்
இல்வாழ்க்கையில் வெற்றி தானாய் வரும்
வெற்றி வாழ்க்கை வாழ்ந்து விட்டால்
வேங்கடவனும் அருள் புரிவான்
அவனின் அருளும் கிடைத்து விட்டால்
வாழ்க்கையின் ரகசியம் புரிந்துவிடும்
அதுதான் ..........
"வாழ்க்கை என்பது வாழ்வதற்கே"