என் சமர்ப்பணம் என்றும் அன்பிற்கே,
போராட்டங்கள் நடைபெறுகின்றன அநீதியின் கிளைகள் மட்டுமே வெட்டுவதற்காக.
அநீதியின் ஆணிவேரைப் பிடுங்கும் போராட்டங்களை நடத்த தயாராக இல்லை யாரும்.
அநீதியின் ஆணிவேர் செழிப்பாக பாதுகாக்கப்படுகிறது ஒவ்வொருவர் மனதிலும்.
அந்த அநீதியின் பிறவியிலேயே கிடைப்பதில்லை யாருக்கும்.
வளர வளர சமுதாயம் கற்றுத் தருகிறது யாவருக்கும்.
பிறந்ததும் அழுகிறோம் காரணமென்ன?
இறந்ததும் அழுகிறோம் சாதித்ததென்ன?
மூளையைக் கசிக்கிப் பிழிந்து பாரு.
எல்லாமே புரியத் தொடங்குகையில் நீயே கூறு.
உண்மையை மறக்க முயற்சிக்கலாம் யார் வேண்டுமானாலும்.
காலம் கனிந்து உண்மையை நினைவூட்டும் யாவருக்கும்.
வாழ்ந்து முடித்தவனாட்டம் எழுதுகிறேன் நான்.
காரணம் யாரு?
எழுத வைப்பவன் இறைவன்.
என்னால் ஆவது எதுமில்லை.
ஆக்குவிப்பது இறைவன்.
ஆற்றலும் தருவான்,
தன் பால் ஈர்த்து உடலையும் அழிப்பான்,
காத்து நின்றே செயல்படுத்துவான்,
அன்புருவானவனிடம் அன்பால் சரணடைந்துவிட்டால்...