ஈர விறகு

கீரை குழம்பு
புழுங்கல் அரிசி சாப்பாடு
வறுத்த கருவாடு
மதியம் ஒருமணி
சுடச்சுட சாப்பாடு
வியர்க்க வியர்க்க
சாப்பிட்டு விட்டு
மூனுமணி வேலைக்கு
போவார் அப்பா...

கோடை மழைக்காலம்
நனைந்த அடுப்பு
ஈர விறகு
அடுப்பை ஊதி ஊதியே
மயங்கிவிழும் அம்மா
இதை எதையும்
அறியா அப்பா
வேலைமுடித்து வந்தவுடன்
கண்ணம்மா சாப்பாடு
அருமையா இருந்திச்சி
என்றவுடன்
ஈர விறகு கதையை
அப்பா காதில் போடாமலே
நாளையும் ஈரவிறகில்
சமைக்க தயாராவாள் அம்மா...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (27-Mar-18, 11:10 pm)
Tanglish : eera viraku
பார்வை : 146

மேலே