கண்ணீர் பரிசு
கவலையில்லா வண்ணபூக்கள்
காலில் மீதிபட்டு அழிவது ஏனோ,
சிறு எறும்புக்கும் தீங்கு செய்யாத
சிறார்கள் சிதைவது ஏனோ,
வீதிக்கு வந்து நாய்கள் அலைகின்றன,
வேட்டைகாரன் துங்கிவிட்டனோ -இல்லை
பிணத்தை சாப்பிட்டு சலித்துவிட்டதோ,
எத்தனை தெய்வங்களும் இருந்தும்
இவர்களை காக்க யாருமில்லையா,
வண்டு கூட தீண்டாது மலராத மொட்டுகளை,
நண்டு போல் காத்திருந்து கயமை செய்வது ஏனடா,
கள்ளம் கபடமற்ற கடவுளின் பிம்பங்களுக்கு
கண்ணீர் பரிசுகளை தருவதா ,
விண்னை வெல்லவும் நம்பிக்கை தருவோம்,
இனியவது ஒன்றுபடுவோம்,
ஒழுக்கத்தை போதிப்போம்,