கற்பு

சீதா,மண்டோதரி ,தாரா
அகல்யா, திரௌபதி என்று
இதிகாச கால கற்புக்கரசிகள்
கற்புக்கு கண்ணகி,வாசுகி
என்று சங்க கால கற்புக்கரசிகள்
இன்னும் எத்தனையோ எத்தனையோ
கற்பின் திலகங்கள் வாழ்ந்த நாடு இந்நாடு;
மிக்கப் பெருமை;, ஆயின் கற்பு என்பது
ஆணிற்கும்தான் என்பதை ஆண்கள்
மறந்ததேன், மறந்தாரா, இல்லை இது
அவர்க ஆதிக்கமா......... எப்படியோ ,ஸ்ரீ
ராமனின் அவதாரமே ஒருவனுக்கு ஒருத்தி
என்ற தத்துவத்தை வலியுறுத்த , அதில்
கற்புக்கரசனாய் ஸ்ரீ ராமன் ...........

இப்படி கற்பு இருபாலுக்கும் என்பது
புரிந்துவிட்டால் பெண்ணின் கற்பை
சூறையாடல் கனவிலும் நடக்காது
மனதில் உறுதி வேண்டும் ..வாக்கில் உறுதி
தீது ஏதுமிலா எண்ணம் தூய்மை தந்திடும்
பெண்ணை ஒரு போதும் துன்புறுத்தமாட்டான் ஆண்
கற்பின் சிந்தனை செயல் இருவரையும்
எந்நாளும் காக்கும் தெய்வம்போல.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Mar-18, 3:43 am)
Tanglish : karpu
பார்வை : 379

மேலே