ஆறறிவு விலங்குகள்

குட்டிக்கரணம் போடும்
சட்டை போட்ட குட்டி குரங்கு,

ஒற்றை நெல் சன்மானத்தில்
நிகழ்காலம் தொலைத்து
நம் எதிர்காலம் சொல்ல
அட்டை எடுத்துக்கொடுத்த
ஜோசியனின் கிளி.

மகுடியின் இசையில்
லயித்து படமெடுத்தாடும்
காதில்லாத
பாம்பாட்டியின் நாகம்.

நெத்தியில் நாமம் சாத்தி
ஒற்றை குட்டை சங்கிலியில்
கால்விலங்கிட்டு
பாகனின் பாதுகாப்பில்
சில்லறைக்கு
துதிக்கை தூக்கி
ஆசிவழங்கும்
கோயில் யானை.

தண்ணீரில் காற்றுமுட்டையிட்டு
கொண்டிருக்கும் கண்ணாடி தொட்டியே
உலகமாய் வட்டமிட்டுக்கொண்டிருக்கும்
வண்ண வாஸ்த்துமீன்கள்.

பறந்து விரிந்த காட்டிற்குள்
அலைந்து திரிந்த விலங்குகளை,
நீண்டுகிடக்கும் நீலக்கடலில்
நீந்தி கிடந்த மீன்களை ,
ஐந்தறிவை அடிமையாக்கி ,
இதுதான் இயல்பென்று எடுத்துரைக்கும்
ஆறறிவு விலங்குகள் நாம் ....

எழுதியவர் : (29-Mar-18, 7:21 pm)
பார்வை : 41

மேலே