பாம்பு தீண்டினால் கவிதை
இது என் கவிதை
நன்றாக இருக்கிறதா?
நான் எழுதினேன்.
நானாக எழுதவில்லை.
ஆவலில் எழுதப்போய்
நான் தவறிய இடத்தில்
நீங்கள் இருப்பதை
கண்டவுடன் உங்களில்
உறைந்து இருகியிருந்த
அவர் நிசப்தத்தில் கருகிய
என் பயம் உதிரும் நேரத்தில்
இவர் தன் குடை பிரிக்கும்
ஓசையில் நீங்கள் ஒரு
தும்மல் போடுகையில்
அவள் நெகிழ்ந்திருந்த
ஆடையை சரி செய்ய
இவள் உதவிடும் கணத்தில்
உங்களில் வெளிப்பட்ட நீ
என் மனச்சுவரிலிருந்து
தாவி தப்பியோட துணிகையில்
வெடுக்கென கொத்திய
அரவின் கண்களில்
வழிந்து கொண்டிருந்த
அக்கவிதையின் இந்த
கடைசி வரி இருந்தது.
இது என் கவிதை.