இயற்கையோடு ஒரு பயணம்

இறைவனின் பல படைப்புகளில்
இந்த இயற்கை ஒரு
விடை தெரியாத விடுகதை- அதில்
விடைத் தேடிச் செல்கிறேன்!
விருப்பம் இருந்தால்
பின் தொடர்ந்து வாருங்கள்!!


கலைந்து செல்லும் மேகம்
காற்றுடன் வழிய
பல கலைகள் உருவாகும்
அழகிய மோகம்!
ஆயிரம் முனற பார்த்தாலும்
அழகு கூட்டும்
வரையாத ஓவியம்!!

உலகினை எழுப்பும் கதிரவன்
சற்று அசந்து கண்மூடிவிட்டால்
விதைகள் முதல்
வீதி வரை
வெளிச்சத்தைக் காணமுடியுமா?!

அசைந்தாடும் இலையில்
கசிந்து வரும் காற்று
கர்வம் கொண்டு
நின்று விட்டால் - கண்கள்
பார்த்துக் கண்டறிய
இவ்வுலகில் உயிர்கள் இருக்குமா?!

விரல் தொடாத புள்ளிகளை
வின்மீன்களாக வடிவமைத்து - அது
வானில் உருவெடுத்து
வண்ணக் கோலம் அழகினை!
சின்ன இதயம் முதல்
சிறகடிக்கும் இதயம் வரை
இரசிக்காமல் போகமுடியுமோ?!

கடந்து செல்லும்
உலர் மேகம்
கறைந்து வழியும் கண்ணீர் தாகம்!
தேக்கி வைக்க
யார் கற்றுக்கொடுத்தது?
தேவையை யார் தீர்த்து வைப்பது?
உதவி கேட்கும் முன்னரே
உருகி வழிய
உன்னை விட யாரேனும் உண்டோ?!

இடையழகை இதுவரை யாரும்
கண்டதில்லை- முக அழகினை காண
முன் வராத யாரும் இல்லை!
" முழு நிலவாக தினம் நீ தோன்றினால்"
முத்தங்கள் மொத்தம்
உனக்கே சொந்தமாகும்!!

நீல நிற வானம்
முடிவின்றி நீளூம்
அளந்து பார்க்க ஆசை
ஆழ்ந்து பார்க்க பேராசை
எட்டிப் பார்க்கும் போதெல்லாம்
எத்தனை வித்தியாசங்கள்?!!!

இமைக்கும் நொடியில் வந்து
இல்லாத மின்சாரம் கொண்டு
இதயங்களை மிளிர வைக்கும்
மின்னலே- இமை திறந்து
உன்னைக் காண
இவ்வுலகில் எத்தனை தடைகள்
தெரியுமா?!

புனல் மீது
படுத்துரங்கும் பனிதுளி
பார்வைக்கு எட்டாத இடைவெளி!
விளங்காத ஒரு விளக்கத்தினை
நீரில் வைத்தது யாரோ?!

பச்சை நிற விளைச்சலில்
பசியாறும் உணவினை வைத்து
உழைக்க கற்றுக்கொடுத்தது யாரோ?!

பார்வைகள் முத்தமிடத் தூண்டும்
பட்டாம்பூச்சியில்- பல
வண்ணம் வைத்து
பார்வையில் தெனபட வைத்தது யாரோ?!

அதிசயமென்ற போதும்
ஆனந்தமென்ற போதும்
எண்ணி எண்ணி
நினைக்கும் போதெல்லாம்
எல்லாம் விருப்பத்திற்கே என்றபோது!
அதை விரும்பியே
விடுகதையின் விடைகளை கழிக்கிறேன்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (29-Mar-18, 8:00 pm)
பார்வை : 3421

மேலே