கருவறையில் நான்
அம்மா வயிற்றில்
அம்மாவோட வாழ்க்கையில்
அச்சாரமாய் ஆணிவேராய்
வயிற்றில் கருவாக ஆனேன்.....
நாளொரு மேனியும்
பொழதொரு மேனியுமாக
அம்மா வயிற்றில் வளர்ந்தேன்....
தொப்புள் கொடி மூலமாக
அம்மாவுக்கும் எனக்குமான
பந்தத்தை உறுதி செய்தேன்....
நான் வயிற்றில்
அம்மா என்னை
மனதில் சுமந்தாள.......
பல இன்னல்களுக்கு
இடையிலும்
சிரித்தாள் எனக்காக.....
என்னை சுற்றி
பாத்திரங்கள் சத்தம்
துணி துவைககும் சத்தம்....
அம்மா வயிற்றில்
அம்மாவின் கதகதப்பில்
சுகமாக சயனததில் இருநதேன்.....
எந்த கவலையும் இல்லை
எந்த பயமும் இல்லை
யாரை பற்றியும் கவலை இல்லாமல்
துள்ளி கொண்டு இருந்தேன்...
வளையல்கள் சிணுங்க
அம்மாவுக்கு சீமந்தம்.....
அம்மா முகத்தில்
சந்தோஷமும் நம்பிக்கையும்....
அவளுக்கேன முதல் உறவாக நான்......
எனக்கான முதல் உறவாக அவள்.....
இதை
தந்த அந்த கருவறை
என் வாழ்வின் பெட்டகம்... .