என் வாழ்க்கை விடுகதை - 5


சுவாசம் இருப்பதெல்லாம் உயிருக்கு சான்றானது

நான் உயிரோடு இருப்பதற்கு நட்பு சான்றானது

நட்புடன் தாலாட்ட நானும் கண்தூங்க

நிஜமாய் நட்பும் ஒரு வரம்தான்

கிடைக்க பெற்றதில் தனி சுகம்தான்

எனக்கும் தோழி சிலர் உண்டு

நட்பில் தாய்மை எண்ணம் கொண்டு

யோசனை போதனை தினம் சொல்லுவாள்

நான் யோசிக்க மறந்தால் சினம் கொள்ளுவாள்

அவள் பேரை சொல்லவில்லை

சொன்னால் சேதம் வரும் கவலை

காரணம் உண்டு பெண்மை என்று

சொல்லாமல் இருப்பது என்றும் நன்று

எந்நாளும் நான் மறப்பதில்லை

நட்பு என்னுடன் இருந்தால்

எனக்கு இறப்பு இல்லை

தினம் தினம் என்னை பாராட்டுவாள்

யாரும் திட்டாமல் என்னைபார்த்துகொள்வாள்

உனக்கும் ஒரு தோழிதான் கிடைத்தால்

உணர்வாய் என் மகிழிச்சி நான் உரைக்காமல்

விடைகாணும் தேடலாய் ஒரு விடுகதை

என் வாழ்கை தானே என்று இருந்தேன்

விடை காண முடியும் என்று சொன்னாள்

முயற்சிதான் பயிற்சி என்றுபயிலசொன்னாள்

என் சோகமெல்லாம் கொட்டி வைப்பேன்

சில நேரம் கவிதைகளில் விட்டு வைப்பேன்

எந்நாளும் சலித்ததில்லை கேட்டிட

அவளும் மறந்ததில்லை

எனக்கு ஒரு வரம் கிடைக்குமென்றால்

எல்லா ஜென்மும் அவள் வேண்டும்

என் தோழியாக என்றும் இன்னொரு தாயாக

விடை காணும் முயற்சியில் வெற்றி காண்பேன்

அந்த வெற்றியை அவளுக்கு சமர்ப்பிப்பேன்

எனகென தினமும் கனவு கண்டாள்

பணி முடிந்து நான் வீடு

சேரும்வரைகவலைகொண்டாள்

ஒருமுறையும் அவள் குறை சொல்ல வில்லை

எனக்கேன் கேட்க்க தோன்றவில்லை

தவறாய் அவளும் நினைக்க வில்லை

இருந்தும் மனதில் ஒரு கவலை

நட்பு பிரிந்தால் என்னாகும் என் நிலைமை




விடுகதை விடை விரைவில் ....

எழுதியவர் : rudhran (8-Aug-11, 9:35 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 490

மேலே