கண்ணாடி கூண்டினிலே

கண்ணாடி கூண்டினிலே
சிறகொடிந்து கிடக்கின்றேன்
சிறு பறவையாய் மாட்டிக்கொண்டு விழிக்கின்றேன்
ஏன் தான் இந்நிலையோ ?
போதும் இந்நிலையென்று கூண்டை நொறுக்கினேன்
சிறகடித்து பறக்க விரும்பினேன்
ஒரு திசையை முடிவெடுத்து கால் வைக்கையிலே
எண்ணங்கள் மாறிமாறி உதிக்கின்றதே
வேறு திசை நோக்கி பயணிக்க மனம் அலைபாய்கின்றதே
அலைபாய்ந்தது போதுமென்று
நம்பிக்கை கொண்டேன்
மீண்டும் என்திசையறிந்தேன்
என் வழியில் செல்கிறேன்

எழுதியவர் : பிரகதி (31-Mar-18, 6:54 pm)
Tanglish : kannadi koondinilae
பார்வை : 285

மேலே