இயற்கையே துணை
தாயின் அன்பை நினைவுபடுத்தும்
இளந்தென்றல்...
தந்தையின் கண்டிப்பை நினைவுபடுத்தும்
அந்தி வெயில்...
தங்கையின் சண்டையை நினைவுபடுத்தும்
இடி-மின்னல்...
காதலியின் வெட்கத்தை நினைவுபடுத்தும்
செவ்வானம்...
நண்பனின் அரவணைப்பை நினைவுபடுத்தும்
மழைச்சாரல்...
என் நம்பிக்கைக்கு உரமாய்
வளற்பிறை...
மழலையின் சிரிப்பாய் வானத்து
விண்மீன்கள்...
ஊர்சுற்ற துணையாய் சேர்ந்து வரும்
நதிகள்...
அள்ளிக்கொடுக்கும் வள்ளலாய் வாழ்வளிக்கும்
கடல்கள்...
இயற்கையே!உன்னால் என் நினைவுகள் வாழ்கின்றன..!
வாழ்க்கையை தொடர்கிறேன் நீ
துணை இருப்பாய் என்ற நம்பிக்கையோடு..!!
உன் அனுமதியின்றி உன்னை இரசிக்கின்றேன்
ஒவ்வொரு நொடியும்...!!!