இப்போதும் வாழும் மாதொருபாகன் கலாசாரம்

மனித குலத்தின் மிக நீண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் 'கற்பு' என்ற புனிதமெல்லாம், மிக சமீபத்தில் உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் என்பது 'மானுடவியல்' படித்தவர்களுக்கு தெரியும்.

மாதொருபாகனில் வரும் வறடிக்கல் சுற்றும், பதினாலாம் நாள் திருவிழாவும் பலவடிவங்களில் பல்வேறு சமூகங்களில் இருந்தவைதான். இன்றைக்கும் கூட இப்படிப்பட்ட சமூகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது, சில வருடங்களுக்கு முன்பு வரை ஆணுக்கு பெருமையான சமாச்சாரமாக இருந்தது. அதைப் போலவே சில சமூகங்களில் ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்வதும் சாதாரண நிகழ்வாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு இனம் தான் 'டுரோக்பா'.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லாடக் மாவட்டத்தில் தாணு என்ற இடத்தில்தான் இந்த இன மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் ஒரு பெண் தன் விருப்பத்துக்குகேற்ப எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இவர்கள் கொண்டாடும் 'கர்ப்பம் தரிக்கும் திருவிழா' மாதொருபாகனை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் வினோதம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த திருவிழா நடைபெறும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும் பவுர்ணமி நாட்கள் தான் அதற்கென்று ஒதுக்கப்பட்ட நாட்கள். இந்த விழாவில் கருத்தரிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.
விழா நாட்களில் திறந்தவெளியில் பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் அனைத்து ஆண்களும் பெண்களும் ஒன்று கூடுவார்கள். முதலில் இதற்கென்றே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட மதுவகையை அனைவரும் அருந்துவார்கள்.
பின்னர் இசைக்கருவிகள் இசைக்க ஆடிபாடுவார்கள். நேரம் ஆக ஆக போதை தலைக்கேறும். உடைகள் குறையும். முடிவில் நிர்வாண நடனம் ஆடுவார்கள்.

அதன்பின் ஆணும் பெண்ணும் வெட்டவெளியிலே ஒன்று கூடுவார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் என்று விடிய விடிய உறவு நீடிக்கும். இப்படி தாங்கள் உறவு கொள்வதை மற்ற இன மக்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஊர் எல்லையில் பலத்த காவல் போட்டிருப்பார்கள். அதை மீறி யாரும் உள்ளே போகமுடியாது.

இந்த இன மக்கள் இப்படி தாறுமாறாக உறவு கொள்வதால் இவர்களுக்கு பாலியல் நோய்கள் அதிகம் வருகின்றன. முறையற்ற உறவு மேலும் பல சிக்கல்களை அவர்களுக்கு தருகின்றன. இதனாலே இந்த இனம் வேகமாக அழிந்து வருவதாக ஜம்மு காஷ்மீர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கூட்டாஞ்சோறு

எழுதியவர் : (2-Apr-18, 3:29 am)
பார்வை : 87

மேலே