காதல்
என்னவளே , உன்னுடன் பழக பழக
அந்த வளர்பிறை போல உந்தன்
எழில் எல்லாம் மெருகேறுகிறதே
தங்க நிலவாய் இப்போது ஒளிர்கின்றதே,
தெரிகிறதே எனக்கு புறத்தில் மட்டும் நீ ரம்பை அல்ல,
அகத்திலும் எழில் பொங்கும் பெண்ணரசி என்று
உன்னில் நான் காண்கின்றேன்
ரம்பை, மண்டோதரி இருவரின் அழகும் பண்பும்
பெண்மையின் பூரண இலக்கணமும்
மணமும் ருசியும் கொண்ட
அழகிய மாம்பழம் போல ,
எந்தன் குணவதியே குலமகளே
நம் காதல் உன் இந்த ஒளியின் நிறைவில்
பூரண நிலவாய் பிறை தேயா நிலவாய்
நாம் உள்ளவரை நம்மை இணைபிரியா
காதலராய் வாழவைக்கும்
என்றும் பிரிவில்லா காதலராய்