தேவதையின் வரவால்

அன்பால் வென்றாய்,
கல்லையும் கரைத்தாய்,
எனக்காக பிறந்தவள் இவள்தானோ
என்று என்னையே எண்ணவைத்தாய்,
என் தாடிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் தெரிந்தும்
ஏன் பெண்ணே என்னை தேடி வந்தாய்,
என் யன்னலில் செடியை வைத்து காதலை வளர்தாய்,
இதுவரை நான் கண்ட
வண்ணமில்லா கனவுகள் முடிந்ததே,
முட்கள் நிறைந்த பாதைகள்
பூக்களாய் மாறி சுமைக்கின்றதே,
தனித்தீவில் தனியாக இருந்தேன்,
நீ வந்து சிறகுதந்தாய்,
வாழ்க்கை வானையும் தாண்டி செல்கிறதே.