வளர்பிறை

பூங்காற்றே என்வாசல் தேடி வந்தாய்,
வெண்மதியே என்வீடு தேடி வந்தாய்,

முகில்கள் சேர்ந்து
முத்துதூரல் பொழிகிறதே,
நட்சத்திரங்கள் எல்லாம்
பூவாக மாறி பொழிகின்றதே,

கண்களில் மீண்டும் கண்ணீர்
புன்னகையுடன் சிந்துகிறதே,
இரத்த கடிதங்கள் நெருப்பில் எரிந்து
முத்த கவிதைகள் பிறக்கின்றதே,

அடியே !!
உன்பிரிவால் நானடைந்த காயமெல்லம்
மாயமாகி சென்றதே,
உன்வருகையால் எந்தோட்ட பூக்களெல்லாம்
இன்பமாகி சிரிக்கின்றதே.

எழுதியவர் : புதுகை செநா (2-Apr-18, 3:05 pm)
பார்வை : 956

மேலே