இரக்கமற்றவன்
பாதியில் வந்தவளை நினைத்து
கருவறையில் சுமந்தவளை
மண்ணறையில் புதைத்தாயே !!!
மீண்டும் உனக்காக
புதையுண்ட மண்ணின்மேல்
புற்களாக பிறப்பித்தான்
உன்னை காண்பதற்காகவே
ஆயினும் நீயோ
உயிர்த்த அவளை வேரோடு பிடுங்கி
கல்லறையில் திணற மறைத்துவிட்டாயே !!!!!!!!!!