அற்பனின் ஆசை
பரந்தாமன் எனக்கு பார்வையை தரும் தருணத்தில்…
பசி கொண்ட எமனோ பறித்து கொண்டான் என் தாயை பலியாக…
“அம்மா” என்று அழைத்தும்
அரை நொடி கூட வர மறுக்கிறாய்..
“அனாதை” என்று பெயர் பெற்று
அலைகிறேன் நடை பிணமாய்..
என் விழி திறந்தவுடன் உன் விதி முடித்தான் இறைவன்..
இரக்க குணம் கொண்டவன் என்று பெயர் வேறு கொண்டவன் இவன்..
உன் பால் வாசனை படாத எனக்கு..
”பாவி” என்ற பெயரும் இருக்கு..
கருவறை விட்டு வெளியே வந்தேன்..
உன் கல்லறையை காண வைத்தாய்…
கட்டி அணைக்க நீ இல்லாமல்..
கதறியபடி அழ வைத்தாய்…
சத்தமிட்டு ஓலமிட்டு
அலைகிறேன் தெரு தெருவாய்..
இந்த அற்ப மானிடன் அமைதியாய் வாழ
என் அன்னை இல்லாமல் முடியுமோ..?