அப்பா
தன் அழகை பாராமல் தன் பிள்ளைகளின் அழகை பார்த்து ரசிப்பவர்,
தன் அறிவை கண்டு வியக்காமல் தன் பிள்ளைகளின் அறிவை கண்டுவியப்பவர் ,
தன் உணவை உண்ணாமல் தன் பிள்ளைகளுக்கு ஊட்டிவிடுவார்,
தான் உறங்காமல் தன் பிள்ளைகளை உறங்கவைப்பவர்,
தான் பெற்ற இன்பங்களை தன் பிள்ளைகளுக்கும் ,
தான் பெற்ற துன்பங்களை தனக்கு என கொண்டு வாழும் ஒரே ஜீவன் .........