வாழ்த்து

அழகே அறியா அழகு
அறிவே அறியா அறிவு
கற்பனையோ வானளவு
செல்வமோ மலையளவு
ஆடம்பரம் இல்லை
அவள் அறியாதது என் ஏதுமில்லை
தன்னை சுற்றி உள்ள வரை
அன்பாய் நடத்தும் மகாலட்சுமி
தன்னை பற்றி மட்டுமே
யோசிக்காத அன்னை
விரல் விட்டு எண்ண முடியாத
அனைத்தும் இறைவன் கொடுக்க
உன்னையே நம்பிய அவளை
வாழ்த்த எனக்கு வயது இல்லை
ஆனால், அவள் ஆயுள் அதிகரிக்க
வேண்டும் என வேண்டி
கொள்கிறேன்....
வாழ்த்துக்கள்...நட்பே..

எழுதியவர் : உமா மணி படைப்பு (4-Apr-18, 9:27 am)
Tanglish : vaazthu
பார்வை : 249

மேலே