ஆருயிரே

உனது துன்பங்களை என்னிடம் பகிர்ந்த போது எனது கண்களில் கண்ணீர் துளிகள் ஊற்றெடுத்து மனம் வலியால் துடிதுடித்து உருகி இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...

ஆயக் கலைகள் அறுபத்தி நான்கு இருந்தாலும்கூட பிரகாய பிரவேச கலையை மட்டும் வரமாய் கொடுப்பாய் என்று......

ஏன்னென்றால் என்னவளின் அருகில் இல்லாவிட்டாலும், எனது உயிர் உடலை விட்டு அவள் மகனின் உடலில் ஊடுருவி தந்தையைப் போன்று துன்பங்களைச் சமாளித்து வாழ்வை இன்பமாய் வாழ்வதற்கு வழிகாட்டுவதற்கும்...
தைரியமாக பிரச்சினைகளை கையாளும் முறைகளை கற்று தருவதற்கும்....
எங்கேயும், எப்பொழுதும் நான் உன்னுடன் இருக்கிறேன், கவலைப்படாதே என்று கூறுவதற்கும்.............

அவள் மகளின் உடலில் ஊடுருவி தாயைப் போன்று அன்பு மழையைப் பொழிந்து துன்பங்களைப் பகிரச் செய்து ஆறுதலாய் பேசுவதற்கும்.... துன்புறும் நேரங்களில் உற்ற உறுதுணையாய் இருந்து துன்பங்களை மறந்து ஆனந்தமாய் இருக்க செய்வதற்கும்....
தான் கற்ற அனுபவங்களைக் கூறி மனதை அமைதிப்படுவதற்கும், பக்குவமடையச் செய்வதற்கும்,மன அழுத்தத்தை குறைப்பதற்கும்...
பாசம் கலந்த உணவை ஊட்டி பசியைப் போக்குவதற்கும்........
மடியை தலையணையை மாற்றி துன்பங்களை மறந்து நிம்மதியாய் உறங்கச் செய்வதற்கும்.......

சில தருணங்களில் தந்தையாகவும், சில தருணங்களில் தாயாகவும் இருந்து என்றும் உன் அருகில் இருந்து உன்னை அரவணைத்து, என்றும் முகத்தில் சிரிப்பை காண்பதற்கு.....

முதுமையில் மகனாய், மகளாய் இருந்து உடல் நலத்தைப் பேணிக் காண்பதற்கும், பணிவிடைகளை செய்வதற்கும்......

உன்னுள் ஊடுருவி உனது துன்ப நினைவுகளை அழித்து உனது உயிரோடு ஒன்றாய் கலந்து இதயத்தில் குடி இருந்து உன்னை மகிழ்விப்பதற்கு........

எழுதியவர் : ஏழுமலை A (4-Apr-18, 10:17 am)
Tanglish : aaruyire
பார்வை : 401

மேலே