பொதுநலவாதிகள்

பொதுநலவாதிகள்
==================

தெருவோரம் செத்துக்கிடக்கும் ஐந்தறிவு.

மூக்கைப் பிடித்துக்கொண்டு
கடந்து சென்றுவிடுகிறது ஆறறிவு.

கூட்டத்தைக்கூட்டி
ஒற்றுமையைக் காட்டி
துப்பரவு செய்வதையும் பார்க்கிறோம்
கொத்தித் தின்னும் காக்கைகளாய்.
==================
மெய்யன் நடராஜ்
===================

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Apr-18, 2:42 am)
பார்வை : 165

மேலே