விவசாயி

ஏர் கூட்டி நிலம் உழுது
கழிந்து போனது எங்கள் பொழுது
சேற்று வயல் நாற்று நட்டு
எங்கள் வியர்வையும் சேர்த்து நட்டு
இரவும் பகலும் நீர் பாய்ச்சி
வலுவியந்தது எங்கள் உயிர் மூச்சி
இப்படி பாடு பட்டோம் பயிர் வளர
நீ(அரசாங்கம்) என்ன செய்தாய் எங்கள் மனம் குளிர.