புதிதாய் பிறந்தவள் நீ

நிலவை நீ உண்ணும் வெள்ளி கிண்ணம் ஆக்கிடுவேன்!

இரவை நீ உறங்கும் போர்வை ஆக்கிடுவேன்!

கதிரவனை நீ சூட்டும் நெற்றி பொட்டாக்கிடுவேன்!

கனியை உன் இதழின் சுவை ஆக்கிடுவேன்!

பூவை உன் கூந்தல் மணம்
ஆக்கிடுவேன்!

புவியை நீ விளையாடும் பந்தாய் ஆக்கிடுவேன்!

மேகத்தை நீ பயணிக்கும் வாகனம் ஆக்கிடுவேன்!

மழையை நீ குளிக்க நதியாய் ஆக்கிடுவேன்!

இவை அனைத்தும் நான் உனக்கு பரிசாய் அளித்திடுவேன்!

பூமயிலே!

நீ பூமிக்கு அவதரித்த திருநாளில்!

எழுதியவர் : சுதாவி (6-Apr-18, 11:59 am)
பார்வை : 103

மேலே