காத்திருக்கும் கமலம் நான்

கதிரோனின் கிரணங்கள்
கமலமுகம் மலர -கண்ணா,
உன் கண்ணொளி என்மேல்
இன்னும் படவில்லேயே -என்
வாட்டம் உனக்கின்னும் புரியலையா ,
பூத்தால்தான் எழில்பொங்கும் கமலம்,
மேகத்தில் மறைந்து காணாது
போனால் கதிரோன்,, இன்னும்,- ஏங்கியே
மொட்டாய் கருகிடும் அல்லவா
அந்த கமலம் , இன்னும் ஏன் தாமதம்
கண்ணா , என் கண்ணா, உன் பார்வையால்
என் முகத்தை மலரவிடு, ஒருமுறை
என் மலர்ந்த முகத்தை நீ கண்டுவிட்டால்
உதய சூரியனாய் நீ நின்றிடுவாய்
மேற்கில் சென்று மறைய மறந்து

இப்படிக்கு உன் வரவிற்கு ஏங்கி நிற்கும்
நீ இன்னும் அறியா உன்னவள் நான் ,
கமலம் என்னும் கன்னிமகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Apr-18, 2:36 pm)
பார்வை : 87

மேலே