பிறந்த நாள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் இனியவனே...

மனிதனாகப்பெற்றவன் அனைவரும் சஞ்சரிக்க விரும்பும் அழகான அனுபவத்தை தந்தவன் நீயே!!!

விழிகள் சந்தித்த மறுகணமே இதயங்கள் இடமாற்றம் செய்து கொண்டன..

என்னுடைய அன்புக்கும் அரவணைப்புக்கும் உரிமையானவனே...

உன்னைப் பிரியும் ஒரு நொடி கூட நரகம் தான்..

உன் வெற்றிக்கு பரிசாகவும் தோல்விக்கு மருந்தாகவும் நானிருக்க விழைகிறேன்..

என்னுடையவனின் பரிசாக எந்நாளும் வாழ விழைகிறேன்!

என் மனதை வென்றெடுத்த என்னவனுக்கான பிறந்தநாள் பரிசு
நானும்! என் கவிதையும்!

எழுதியவர் : தமிழிசை (6-Apr-18, 2:37 pm)
சேர்த்தது : தமிழிசை
Tanglish : pirantha naal
பார்வை : 380

மேலே