கற்பிற் கணங்கினைக் கண்டேன்நான் அண்ணலே

கற்பிற் கணங்கினைக் கண்டேன்நான் அண்ணலே
பொற்குவை பூமகள் தந்தாள்சூ டாமணி
அற்புத நின்கணை யாழிபெற்ற ஆறுதலில்
விற்திறத்தால் வெல்மன் னவ !
கவிக்குறிப்பு : . அனுமன் அசோக வனத்தில் அன்னை சீதையைக் கண்டு அண்ணலின்
கணையாழியைக் கொடுத்து ஆறுதலில் அளித்து அன்னையின் சூடாமணி பெற்று
அண்ணலுக்குக் கொடுத்து மகிழ்வித்து விற்திறத்தால் அரக்கன் இராவணனை
வென்று அன்னையை மீட்க வேண்டிய வேண்டுகோளை வைக்கும் இராமாயண சுந்தர காண்ட காட்சி.
கண்டேன் கற்பிற்கு அணங்கினை ---கம்பனின் சொல்லாட்சி .