கற்பின் உயர்தேவி கல்லானாள் சாபத்தால்

அருந்தவ மாமுனிவன் பேரெழில் இல்லாள்
இருள்பிரியா காலையில் இந்திரன் காமத்தால்
கற்பின் உயர்தேவி கல்லானாள் சாபத்தால்
பொற்பெண்ணா னாள்பாதத் தால் .

கவிக்குறிப்பு : அகலிகை சாப நீக்கம்

கவிப்பிரிய வைத்தியநாதனின் விருப்பத்திற்கு இணங்க
ராம நாமத்துடன் இன்னொரு வடிவம் .

அருந்தவ மாமுனிவன் பேரெழில் இல்லாள்
இருள்பிரியா காலையில் இந்திரன் காமத்தால்
கல்லானாள் சாபத்தால் கற்பினள் ராமன்தன்
பாதத்தால் நற்பெண்ணா னாள் .

எழுதியவர் : கவின் சாரலன் (6-Apr-18, 9:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 91

மேலே