மாயமான் மோகத்தால் மான்விழியாள்

மாயமான் மோகத்தால் மான்விழியாள் ஏவுதலால்
மாயமால் தோன்றலும் வில்லுடன் பின்தொடர
மாயமாரீ சன்மாய மானைச் சிறையெடுத்தான்
மாயவேட பித்தராட்ச சன் !

கவிக்குறிப்பு : சீதை மானைப் பிடித்துத்தர இராமனை வேண்டிய காட்சி
இராம காவியத்தின் திருப்பு முனை நிகழ்ச்சி

மாயமால் தோன்றல் = மாயத் திருமாலின் தோன்றல் இராமன்

மாயமாரீசன் = மாய மான் வடிவில் வந்த அரக்கன்

மானை = மான்விழியாள் சீதையை

மாயவேட பித்த ராட்சசன் = கபட சந்நியாசியாய் வந்த பெண்பித்த அரக்க இராவணன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Apr-18, 9:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 127

மேலே