நொந்து சிவந்தன கண்கள்

வருவேன் எனக் கூறிச் சென்ற
உன்னைக் காணும் வரை
இனித் தூங்குவதில்லை
என்ற இடுவாம்பிலிருக்கும்
அவள் விழிகளை மட்டும்
இப்போது நெருங்கி விடாதே ,
உன்னோடு கொண்ட
கோபக் கொப்பளிப்பில்
உருமாறி சிவந்து
நெருப்புக் கோளமாய்
மாறிக்கிடக்கும் அவை
நிச்சயமாக உன்னைச்
சுட்டெரித்து விடும்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (7-Apr-18, 2:08 pm)
பார்வை : 122

மேலே