உந்தன் கண்களின் பார்வை

கற்சிலைக்கு சிற்பி
முடிவில் செதுக்குவது
கண்களே , செதுக்கியபின்
' திறந்து விடுவான்' கண்களை,
சிலைக்கு உயிர் தந்திட;
பெண்ணே, உன்னைப்படைத்த
பிரமனும் அப்படிதான்
உன்னை படைத்தான்
என எண்ணுகிறேன் நான்,
எனைப் பார்த்துநீ
என் உணர்வுகளுக்கும்
உயிர்தந்தபோது
உயிர் தரும் உந்தன்
அந்த ஒளிபடைத்த கண்கள்
அது மோகம் தரும்
காமம் தரும்,பின்னே
காதல் தந்து ,முடிவில்
மோன நிலைக்கும்
உயிரை ஏற்றி நிறுத்தும்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Apr-18, 2:22 pm)
பார்வை : 203

மேலே