பூமிக் கனவு

இரவு உறங்குகிறோம்.....

சிரிக்கிறோம், அழுகிறோம்
நிற்கிறோம், நடக்கிறோம்
வாங்குகிறோம், கொடுக்கிறோம்
சேர்கிறோம், பிரிகிறோம்

இன்னும் எத்தனையோ
எண்ணிலடங்கா அத்தனையும்
அப்படியே கனவில் விட்டு
எழுகிறோம் வெறும் கையோடு
- காலையில்

அப்படித்தானோ....
இந்த புவி வாழ்க்கையும் ?

எத்தனை இன்பங்கள்...
எத்தனை துன்பங்கள்...
சேர்க்கும் பொருள்கள்...
சேர்க்காத உறவுகள்...

அத்தனையும் மொத்தமாய்
இங்கேயே விட்டு விட்டு

கண் மூடி
கண் விழிப்போம்
மேலுலகில்

பூமிக் கனவை முடித்து
வான வாழ்க்கை
நுழைகிறோமோ...

மேலுலக வாழ்வாவது
நிரந்தரமா???
இல்லை
அதுவும் இது போல
இன்னொரு கனவா???

இறைவனே அறிவான்.

🌼இன்னிலா🌼

எழுதியவர் : இன்னிலா (8-Apr-18, 2:20 pm)
பார்வை : 40

மேலே