உழவனே இறைவன்
வானில் மிதந்திடும் மேகம்...
அது காற்றுடன் கொள்ளும் மோகம்...
அழகாய் உருவம் மாறும்...
விண்மழை மண்வந்து சேரும்..!
மயிலது மயங்கி ஆடும்...
மண்மணம் மனமெல்லாம் ஏறும்...
சிலர்கண் குடையைத்தேடும்...
அவன் கால் மழையை நாடும்..!
வறட்சியில் தவித்த உழவன்...
மகிழ்ச்சியாய் துள்ளுவான் கிழவன்...
உணவினை அளித்திடும் தலைவன்-அவன்
உயிர்களை வளர்த்திடும் இறைவன்..!
ஏர்பிடித்து பூமியதைப் பிளப்பான்..
எருவூட்டி மீண்டு்ம் உயிர் கொடுப்பான்...
விதை தெளித்து வேரூன்ற நினைப்பான்...
பதைபதைத்து பருவமெல்லாம் துடிப்பான்..!
நீர்பாய்ச்சி நெடுவயல் நடுவான்...
களைநீக்கி பெருமூச்சி விடுவான்...
உரமிட்டு உயிராக வளர்ப்பான்...
மரமொன்றே வீடாகக் கிடப்பான்..!
கதிர்காண கண்பூத்து இருப்பான்...
கடவுளிடம் கையேந்தி நிற்ப்பான்...
பயிர் பார்த்து பசிதூக்கம் மறப்பான்...
கண்ணோடு கண்வைத்து பயிர்களை காப்பான்..!
கயிறால் கட்டி பயிர்கள் கிடக்கும்...
கற்க்களில் அடிக்கையில் கதிர்களும் சிதறும்...
சிதறிய நெல்தான் அரிசியாய் மாறும்...
உபரிப் பொருட்களும் உபயோகமாகும்..!
பசியை போக்கிடும் தாயின் குணமும்...
பரம்பரை உழவனின் செயலில் தெரியும்...
உயிரிகளெல்லாம் உயிர் வாழ உதவும்...
இறைவன் பெயரே உழவன் ஆகும்...!