ஆண்ட்டி படங்கள்
பார்ப்பதுண்டு...
விரும்பாமல் விரும்பியும்
தனிமையில் பதைப்பதை
தவிர்க்க வேண்டியும்...
உஷ்ணத்தின் கீச்சொலி
அவலத்தை நிராகரிக்க
திரையரங்கு கூடத்தில்
பார்ப்பேன் நான்...
அத்தைகள் என்போரை
மாமாக்கள் பொறுக்கும்
காட்சிகளில் மெல்ல
உடையதொடங்கும் உள்ளம்
உயிரின் கவனத்தை
முறுக்கி கூராக்குகையில்
அவசர அவசரமாய்
புரியாத பாஷையும்
இனங்காணா இசையும்
முடித்துவிடும் யுத்தத்தை.
மனதில் பதியாத
அந்தப்பனிப்போர்
பதியும் வேறொன்றாய்...
உடல் கூச மறுத்தும்
மனம் கூசக்கூச...
முகம் கனத்த
அத்தையெனும்
நடுத்தர வயதின்
பிச்சுப்பிடுங்கும்
வறுமையின் எரிச்சலும்.
வயிற்றின் குமைச்சலும்.