நீடூழி நீ வாழ்க
வாஞ்சைக்கு பிறந்தவளே
வசந்தத்தின் திருமகளே
வாழ்க நீ பல்லாண்டு......
தாய் தந்த அமுதே
தமிழ் கொண்ட சுவையே
தரணியுன் புகழ் பாட....
வெற்றிநடை நீ போட்டு
வளர்க நீ பல்லாண்டு........
முக்கனியின் முழுசுவையே
முழுமதியின் கவியழகே
வானம் உன் வசப்படட்டும்
வாழ்த்துக்கள் பலநூறு....
வாழ்க! வாழ்க!!
நீடூழி நீ வாழ்வே.......