இளைய தலைமுறை
நுனிப்புல் மேய்ந்திடும்
தலைமுறை நாங்கள்
எமக்கு தனிக்கவனம்
என்று எதிலும்மில்லை!
தலைப்புச் செய்தியாயினும்
அதன் தலைப்பை
மட்டுமே படித்திடுவோம்!
திரைத்துறை செய்தியை மட்டும்
தவறாது முடித்திடுவோம்!
தாயிடம் பாசத்தையும்
தாய்நாட்டிடம் பற்றையும்
சமூக வலைதளத்தில்
மட்டுமே காட்டிடுவோம்!
பைத்தியமாய் பெண்ணை
காதலிப்போம்
தைரியமாய் அதை
சொல்லத் துணியோம்
அவள் ஏற்றுக்கொண்டால்
அமிழ்தப் பேச்சு
அதுவே வேண்டாமென்றால்
அமில வீச்சு
உணவில் கூட
துரிதம் நாடுவதால்தானோ
உறவிலும் விரிசல்
உடனே வர விட்டுவிட்டோம்!
அடக்குமுறைக்கு நாங்கள்
அடிபணியோம்
அதனால்தானோ
ஆனவக்கொலைகளிடம்
வீழ்ந்து விட்டோம்!
கலையில் மட்டும்
நாட்டம் அதிகம்
அதன் விளைவால்தானோ
திரையில் நடிக்கும்
மனிதருக்கும் ஏனோ
சிலை வடித்துவிட்டோம்!
ஆன்மீகத்தில் எமக்கு
நாட்டமில்லை
ஆனால் எம் தலைவருக்கு
ஆண்டவர் என்று
பெயர் வைப்போம்!
எனது கிறுக்கல்கள்✍️