குடிமகன்
மெல்ல அருந்தினேன்
இயல்பை மீறி
சற்று வேகமாகவே
சுழன்றது பூமி!
சொர்கத்தின் வாசல்
திறக்குமென்றார்கள்
அரூபங்கள் புன்முறுவலுடன்
விடுவித்துகொண்டது
மனச்சிறையில்...
உளறித்தீர்த்தேன்
உருப்படியும் உருப்படி இல்லாதவைகளையும்..
வலிகள் மறந்து
போகுமென்றார்கள்
வந்த வழிதான்
மறைந்து போனது...
தலைவலியை துணைக்கு
அழைத்துகொண்டு...