இளையவன்...

தம்பியின்
தலையணை
சண்டையுடனேயே
துவங்குகிறது...
ஒவ்வொரு நாள் விடியலும்....!!!

அக்கா தான்
அனுசரிக்க வேண்டும்..
நிலையை மாற்றினான்..!

என் பிடிவாதங்களுக்கு
விட்டுக் கொடுப்பதைப்
பரிசாக்கினான்..!

என் மகிழ்வில்
மகிழும் அவன்
அன்னையாய் தோன்றுவான்..
சில தருணங்களில்...
தந்தையாகவும் தெரிகிறான்...
என் தவறை உணர்த்துகையில்...!!!

என் தோல்வியிலும்
மகிழ்வதாய் காட்டிக்கொள்வான்..!
நான் மட்டுமே அறிவேன்..
அது அடுத்த முயற்சிக்கான தூண்டுகோள்...!!!

தொல்லைகள்
தரும்போதிலும்..
தொந்தரவாய் கருதாமல்.,
தோள் கொடுக்கிறான்..
ஓர் தோழனாகவும்...
துவளும் சமயங்களில்...!!!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (8-Apr-18, 10:23 am)
பார்வை : 57

மேலே