அழிவதில் வாழ்வது அறியாமையே நெஞ்சே

#அழிவதில்_வாழ்வது_அறியாமையே_நெஞ்சே...

அது நிசமென்பார்!?
இல்லை,
அது நிழலென்பார்!?
இல்லை,
இது நிசமென்பார்!?
இல்லை,
இது நிழலென்பார்!?
இல்லை,
நிசமா? நிழலா?
உண்மை நிலை அறிவார் யாரோ?

கூழ் உண்டான்,
சோறோடு நீர் கலந்தே பழைய கஞ்சியென்றான்,
பழைய கஞ்சியோடு உப்பு, காரம் சேர்த்தே வடகம் என்றான்,
காய்கறிகளைச் சமைத்தே உண்டான்,
இருந்தும் பசியடங்கவில்லையே என்ன செய்வான்?

அடங்கா பசி அடங்க அறிவில் சிறந்த பேசமுடியா விலங்குகளை வேட்டையாடியே உண்டான்,
உண்ட மாமிசத்தில் பய உணர்வே நிரம்பியிருக்க, உண்டவனும் பயம் கொண்டான்,
நீக்க இயலாத பயத்தை மறக்க பணத்தையே துணையாகப் படைத்துக் கொண்டான்,
இருந்தும் பயம் போகவில்லையே என்ன செய்வான்?

அங்கும் இங்கும் ஊசலாடும் ஈசல்களின் பரம்பையாய் மனித பூச்சிகளின் வாழ்வது அமைய அதுவே சொர்க்கமென்று குதிரை பந்தய ஒட்டம் ஒடும் காளைகளின் நெஞ்சிலே கறை படியக் காரணமே
வளர்த்த வளர்ப்பும்,
விதைத்த விதைப்பும் என்று வளர்த்தவரும் அறியவில்லையே,
விதைத்தவரும் அறியவில்லையே,

அறியாமையில் மூழ்கிய இவர்களுள் நிசம் எது? நிழல் எது? என்பதைத் தெளிவித்தே பயம் போக்குவார் யாரோ?
கண்டறிந்தாயோ நெஞ்சே?
அறிந்ததைச் சுட்டிக்காட்டுவாயோ நெஞ்சே?
அழிவதில் வாழ்வது அறியாமையே நெஞ்சே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Apr-18, 10:57 am)
பார்வை : 1259

மேலே