ஆகாய நிலவேறி

"பசியுள்ளான் ருசி அறியான்"
ஆனால் நானோ உன் செவ்விதழ் கனி ருசி அறிய பசி கொண்டுள்ளேனே என்ன சொல்ல....உன் கண் பார்க்கையில் நான் கனிந்து விடுகிறேன்....அந்நேரம் நான் உன் மேல் மோகம் கொண்டாலும் அதுவும் காதலையே சேரும்...
மதுபான குளிர் பனிக்கட்டி உன்னை என் இரு கைக்குள் பூட்டி அணைக்கட்டுமா...இல்லை எட்டடி எட்டி நின்னு அணு அணுவாய் இரசிக்கட்டுமா...உன் அல்லி மலர்க் கண்ணம் அதை கில்லி விளையாட ஏங்குதென் மனம் அது தினம் தினம்....என் ஆசையெல்லாம் சொல்லி முடிக்க நேரங்காலம் கூடிப்போகும் அதற்க்குள்ளே வா என் செல்ல கண்ணே நாம் ஆகாய நிலவேறி போவோம் விடியாத வானம் அதை தேடி.......🌙