வாழவைத்த விதி- ஒரு பக்க நகைச்சுவை -சிந்திக்க, சிரிக்க

அவன் காதலில் தோல்வி அடைந்தன, அது ஒரு தலைக்கு காதல்
அவன் அவளை அன்று 'நீ என்னை காதலிப்பாயா என்று கேட்க
அவள் முடியாது என்று முடிவாய்ச்சொல்லா, அவன் உடைந்த
மனதோடு நேராக , ரயில் தண்டவாளத்தில் தலை கொடுக்க
சென்றான், தண்டவாளத்தில் தலைவைத்து, ற்றின் வருமா என்று
மனதில் வலியுடன் காத்திருக்க,வெகுநேரம் ஆகியும் வண்டி ஏதும்
வரவில்லை; மெதுவாக இப்போது, தலையை தண்டவாளத்தில் இருந்து
விலக்கி, எழுந்து நின்றான், ஓஹோ, இது என்ன கொடுமை,இந்த
விதி என்னை சாகவும் விடமாட்டேன்னு இருக்கே என்று நிற்கையில்
எங்கிருந்தோ, ஒரு அலறல் கேட்க, திரும்பி பார்க்கின்றான், அங்கு
பக்கத்து தண்டவாளத்தில், ஒரு அழகிய பெண்ணொருத்தி ,தன்னை
மாய்த்துக்கொள்ள, தண்டவாளத்தில் தலை வைக்க,

இவன் ஓடுகிறான் அங்கு, அவளை நெருங்கி, பெண்ணே என்
நீ இந்த கொடூர முடிவுக்கு வந்தாய் என்று கேட்டு, அவளை
தண்டவாளத்தை விட்டு விடுவிக்க, அவள் சொன்னாள்........
நான் என்ன செய்வேன், எவனை நான் விரும்பி என் மனம்
கொடுத்து என்னையும் கொடுத்தேனோ, என்னை விட்டுவிட்டு
ஓடிவிட்டான், வேறு வலி தெரியாது என்னை மாய்த்துக்கொள்ள
வந்தேன், என்னை விட்டுவிடு, என் வழியே போக , என்றால்,
திமிறினாள் , அப்போது அவன் சொன்னான், 'பெண்ணே
நான் ஒருவேளை மனதில் விரித்தேன், ஆனால் அவளோ என்னை
கண்ணால் பார்க்கவும் மறுத்தாள், மனம் ஒடிந்து இங்கு வந்தேன்
இதோ உன்னை சந்தித்தேன்...... என்றான்

இவனும் காதலில் தோல்விகண்டவன், அவளும் காதலில்
தோல்விகண்டவள்.........விதி அவர்கள் இருவர் முடிவையும்
மாற்றிவைக்க எண்ணியதோ, அன்று 'ரயில் ரோக்கோ'
ரயில் பந், காலை ஆறு முதல், மாலை ஆறு வரை எந்த
வண்டியும் ஓடாது இன்பது இவர்கள் இருவரும் அறியவில்லை
ஆனால் விதி ஒரு மனா பாதிப்பில் இருந்தவரை சேர்த்துவைக்க
அவர்கள், அங்கே அப்போதே காதலர்களாய் மாற .............

அதோ கைகோர்த்து போகின்றார், காதலர்களாய் ...........எங்கே
காதல் மறுமலர்ச்சி நோக்கி....................

அவர்கள் ஒன்று நினைக்க, விதி வாழவைத்து !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Apr-18, 2:27 pm)
பார்வை : 197

மேலே