உன் மீது மிகுந்த அன்பு வச்சேன்!...
உன் மீது மிகுந்த அன்பு வைத்தேன் அதைவிட அதிகம்
ஆசை வைத்தேன்
நீ தந்தால் அறலியையும் அரைத்துக் குடிப்பேன் ..
உனக்கு ஒன்னுன்னா என்னுயிர் நோக துடிப்பேன்...
கண்ணுக்குள் உன்னை சிறை பிடிப்பேன் கனவிலும் உன் பேரை நான் படிப்பேன்..
உன்னை நினைத்து காத்துக்கு முத்தமிட்டேன்
அது உன் கண்ணம் தீண்ட காயப்படும் என்றெண்ணி அதையும் தடுத்தேன்..
இன்னைக்கு உன் முகம் பார்க்கவே எழுந்தேன் நாளையும் அதற்க்காகவே வாழ்வேன்..
உன்னோடு வாழஎனக்கோ எண்ணற்ற ஏக்கம் உண்டு..என் உள்ளமோ உன் நினைவுப் பூவை சுமக்கும் தண்டு...
இப்படியே உன் மீது தீராக்காதல் கொண்டேனப்பா..அது என்ன என் தப்பா!..
என் சிறு புயலே!
நான் காதலுற்றது ஒரு பொய்க்காலம் இன்று நீ என்னை வெறுக்க என் நெனப்பெல்லாம் சாவில் விழுந்ததே இதுதானா?? அன்பே! என் மெய்க்காலம்..இப்போதுதான் உணர்ந்தேனடா
வாழ்க்கை ஒரு போர்க்களம்
அதில் என்னை வீழ்த்திய அம்பு காதல்!
அதை வாழ்த்திய கரமோ என் மனராசன் உன் கரம் என்று...இப்போதுதான் உணர்ந்தேனடா...