penniyam

மாற்றத்தை அடைய விரும்பும் பெண்
மாற்றத்தை ஏற்காத சமுதாயம்
உரிமைகளுக்காக போராடும் பெண்
உரிமைகளுக்குத் தடையாக சமுதாயம்
பாவப்பட்டது பெண்ணின் பிறப்பு
பிறப்பிப்பது பெண்ணின் சிறப்பு
சாவிக்கொண்ட பொம்மைபோல பெண்
தனக்காக வாழாமல் வாழ்கிறாள்,
அடுப்படியில் எரியும் அவளின் கனவுகள்
குப்பைகளாக மாறும் அவளின் ஆசைகள்
ஒரு கேளிச்சித்திரம் போல அவளின் வாழ்க்கை
பிறரின் சந்தோஷத்திற்காக மட்டும்தான் .
எதற்காக இந்த பிறப்பு ?
ஏன் இந்த தண்டனை ?
ஏன் இதனை துன்பங்கள் ?
தியாகச் சிற்பியாய் வாழும் பெண்ணுக்கு
தியாகமே அவளின் வாழ்க்கை
அறிவியலின் விதிகளை விட
பெண்களுக்கான விதிகள் கூட
நியூடோன்னின் மூன்றாம் விதியை
பெண் கையில் எடுத்துக்கொண்டாள்
அக்னி நட்சத்திரம் போல எழுந்தாள்
அடக்க முடிய சக்தியை மாறினால்

எழுதியவர் : ரதி தேவி (10-Apr-18, 11:14 pm)
பார்வை : 1856

மேலே