யாரோ இந்த நேரம்
மர இலைகளின் மேலே நடந்து
கிளைகள் தாவும்
கட்டெறும்பென நான்
பெரும் பொருள் போல்
உன் உலகு
அதில் ஓர் அணு ஓரம்
சிறுபொய் என நான்
மழைத்துளிகளில் துடித்திடும்
பட்டாம்பூச்சி-
சிறு சிறகினைப் போலே
உன் அழகினில் என் மனம் திணறுதடி
உன் அருளினில் வான்வெளி மலருதடி
படகோட்டி இன்றியே
நடுக்கடலில்
தவிக்க விடப்பட்ட படகென நான்
காற்றை நம்பியே காத்திருக்கேன்
கரை சேர மூச்சையே சேர்த்திருக்கேன்
இரவினில் நடுவீட்டில்
தனியே துடித்திடும்
பழம் மணிக்கூடு
நீ அன்றித் தனிவீட்டில்
கதறுது இதயக் காடு
யாரோ நடுசாமம்
கதவினைத் தட்டும் பொழுது
பயமும் எதிர்பார்ப்பும்
விழிமுட்டும்
எது கடைசியில் எஞ்சும்
அதுவரை துயில் அஞ்சும்